
சிலாங்கூர், மே 7: அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பிரபல இந்தியா கேட் உணவகம் தனித்துவமான சலுகையுடன் வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்கிறது. மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கின்ற இந்த உணவகம், அந்நாளுக்காக ஒரு சிறப்பு பக்கெட் பிரியாணி ப்ரோமோவை அறிவித்துள்ளது.
இந்த ப்ரோமோவில், வழக்கத்தைவிட 10% அதிகமாக பிரியாணி வழங்கப்படுகிறது. அதோடு கூடவே, 1.25 லிட்டர் கோகோகோலா குளிர்பானமும், 350 கிராம் எடையுடன் விற்பனையிலேயே இல்லாத அன்னையர் தின அணிச்சலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியா கேட் உணவக உரிமையாளர் சரவணன் கூறியதாவது, “அன்னையர்களை மகிழ்விக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை சிறப்பு விலையில் வழங்குகிறோம். சைவம் மற்றும் அசைவம் என இருவகையிலும் இந்த பக்கெட் பிரியாணி கிடைக்கும். ஹலால் சான்றிதழுடன், சுகாதாரமும் தரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், நேரடியாக உணவகத்தில் வந்து அன்னையர் தினத்தை கொண்டாட விரும்புபவர்களுக்கு, அழகிய மழலை இசை சூழலில் டோர்ம் செட்டோடு புவே அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்துடன் நேரில் வந்து உணவுக்களித்து கொண்டாட விரும்புபவர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
“அன்னை” என்ற வார்த்தையின் பின்னாலுள்ள உணர்வை சிறப்பிக்க, இந்த சலுகையை தவறவிடாமல் இந்தியா கேட் உணவகத்தை இன்றே தொடர்பு கொள்ளுங்கள்!
-வீரா இளங்கோவன்