Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

சாதி, சமத்துவம், போராட்டம் – மாரி செல்வராஜின் ‘பைசன்’ ரசிகர்கள் மனதை கவர்கிறது

Picture: Online

திருப்பூர், 24 அக். –
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பைசன் காலமாடன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது.

1990களில் தமிழ் கிராமப்புறங்களில் சாதி மற்றும் சமூக அரசியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. “கிட்டான்” எனப்படும் கதாபாத்திரம் சாதியை மீறி சாதிக்க நினைக்கும் வீரராக காட்சியளிக்கிறார். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடுகள், தடைப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவை அவரது கனவுகளுக்கும் வெற்றிக்கும் இடையூறாக மாறுகின்றன.

மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம், சாதாரண விளையாட்டு படம் அல்லாமல் சமூகத்தின் ஆழமான வலிகளை வெளிப்படுத்துகிறது. சமத்துவம், மரியாதை, போராட்டம் ஆகிய மூன்று கோணங்களையும் இயக்குநர் வலிமையாக சித்தரித்துள்ளார்.

திரையுலக விமர்சகர்கள் பலரும், “பைசன் காலமாடன் மாரி செல்வராஜின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்” என்று புகழ்ந்துள்ளனர். அதேசமயம் சிலர், படத்தில் சாதி விவாதங்கள் மிகுந்ததாகவும் கூறி விமர்சித்துள்ளனர்.

மலேசிய தமிழ் ரசிகர்கள் மத்தியில் கூட இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகம். மாரி செல்வராஜின் முந்தைய படைப்புகளைப் போலவே, இந்தப் படமும் சமூக உண்மைகளை திரைமூலம் வெளிப்படுத்தும் ஒரு வலுவான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top