Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

அனைத்து அரசுத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய KKR-க்கு பிரதமர் அன்வார் புதிய உத்தரவு

Picture : Awani

மலேசியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள் சரியாக முன்னேறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த, பிரதமர் டத்தோ’ ஸரி அன்வார் இப்ராஹிம், பணிகள் தொடர்பான முழுமையான மறுபரிசீலனையை KKR அமைச்சகத்திடம் கோரியுள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு திட்டமும் திட்டமிட்ட நேரத்தில், தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். ஆனால் சில திட்டங்கள் தாமதமடைவதும், சில ஒப்பந்தக்காரர்கள் எதிர்பார்த்த தரத்தில் செயல்படாததும் காரணமாக, அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

அதன் காரணமாக, ஒவ்வொரு திட்டத்தின் தற்போதைய நிலைமை என்ன, எத்தனை சதவீதம் வரை வேலை முடிக்கப்பட்டுள்ளது, எந்த பகுதிகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை அமைச்சகம் தெளிவாக அறிக்கை செய்ய வேண்டும் என அவர் கூறினார். அதில் மட்டுமல்லாமல், திட்டத்தை முழுமைப்படுத்த இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும், தாமதம் ஏற்பட்டிருக்கின் அதன் துல்லியமான காரணம் என்ன, யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் தெளிவாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்றார்.

மேலும், ஒப்பந்தக்காரர்கள் கடந்த காலத்தில் எப்படிப்பட்ட பணித் திறனை காட்டியுள்ளனர், அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நேரத்தில் முறையாக நிறைவேற்றியுள்ளனரா என்பது பற்றியும் முழு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அரசின் நிதி வீணாகாமல், மக்கள் நலனுக்கான திட்டங்கள் தாமதமின்றி நிறைவேற வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை அவசியமானது என்றார்.

செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்த இந்த மறுபரிசீலனை மிக முக்கியமான படியாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Scroll to Top