
தமிழ்நாடு , 20 ஜனவரி — அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் இப்ரவரி 6 வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக லைகாவின் இன்ஸ்டகிராம் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் உள்ள இரண்டாவது பாடல் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ஶ்ரீஷா கங்காதரன்