Tazhal Media – தழல் மீடியா

/ Apr 05, 2025
Latest News
tms

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு: 46 பேர் சிகிச்சையில், ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Picture: Awani

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் காயமடைந்த 46 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) தெரிவித்துள்ளது.

இந்த மாபெரும் விபத்து சமீபத்தில் ஒரு தொழில்துறை பகுதியில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகளவில் எரிவாயு கசிய்ந்ததனால் ஏற்பட்ட அணல் பறக்கும் வெடிப்பில், பலர் தீக்காயம் அடைந்துள்ளனர். அவசர சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவியை வழங்கினர்.

46 பேர் தற்போது விவித மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அவர்களில் ஒருவர் மிகவும் தீவிர நிலையில் இருப்பதால் ICU-வில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.மற்றவர்களின் நிலை நிலையான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணைத்து அதிகாரிகளும் சம்பவம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். எரிவாயு கசிவா? பராமரிப்பு தவறா? அல்லது தொழில்துறை முறைகேடா? என்பதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய அரசும், அவசர உதவி சேவைகளும் இந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்கவும்.

முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top