
பெர்லின், 11 ஜூன்: ஜேர்மனி, 2024ஆம் ஆண்டில் அதன் வரலாற்றில் முதல்முறையாக மிக அதிக அளவில் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி புதிய சாதனை படைத்துள்ளது.
ஜேர்மனியின் முக்கிய ஊடகமான Welt am Sonntag வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த ஆண்டு குடியுரிமை பெற்றோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 50,000 அதிகமாக உள்ளது. இது கடந்த ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை விதிகளின் தளர்வுகளுக்கும், சட்ட சீர்திருத்தங்களுக்கும் நேரடி விளைவாகும்.
இந்நிலையில், தற்போதைய அரசாங்க கூட்டணி, குடியுரிமை வழங்கும் விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், குடியுரிமைக்கான ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும், இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படும் என்ற மையக் கொள்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள், ஜேர்மனியில் நீண்ட காலமாக வாழும் வெளிநாட்டவர்களுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக கருதப்பட்டாலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என கவலைக்குரிய கருத்துகளும் எழுந்துள்ளன.
-ஸ்ரீதரன்



