
படம் :கூகுள்
சென்னை, 05 ஏப்ரல்- ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனைத்தை ஈர்த்தது இதன் படக்குழு.
சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இப்படம் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக நடித்துள்ளார்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.சி.பாலஸ்ரங்கன் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஜாக்கி கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தினை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
-ஶ்ரீஷா கங்காதரன்