
தெலுக் இந்தான், 3 பிப்ரவரி — , பேராக் தெலுக் இந்தான் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று மிக கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சமூகவின் முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு விழாவின் புனித ஆசீர்வாதங்களை பெற்றனர்.

கும்பாபிஷேக நாளில், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், யாகங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து நடராஜ பெருமானின் அருள் பெற்று, ஆன்மிகத் திருப்பொறியை அனுபவித்தனர்.
இந்த புனித நிகழ்வில் பக்தர்களுக்காக அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் பக்தர்களுக்கு இறையருளுடன் சமூக ஒருமைப்பாடு மேலும் வலுவடைந்தது.

தெலுக் இந்தான் பகுதி மட்டுமின்றி, அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் பக்தர்கள் வந்ததால், இவ்விழா சிறப்பு சிறப்பாக மிளிர்ந்தது. மகா கும்பாபிஷேகம், பக்தர்களுக்கு மறக்க முடியாத ஆன்மிக அனுபவமாக அமைந்தது. இந்த மகா கும்பாபிஷேகத்தை எம்.கே.யு மலேசிய கலை உலகம் சமூக ஊடகம் வழி நேரலை செய்தனர்.
-வீரா இளங்கோவன்