
தைப்பூசம் பிரதிபலிக்கும் தியாகம், கட்டுப்பாடு, பக்தி ஆகியவை மலேசியர்களை ஒற்றுமையினைப் பலப்படுத்தி, சிறந்த தேசத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகின்றன என ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 11 (செவ்வாய்) அன்று கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்துக்கு முன்னோடியாக அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, மலேசியர்கள் மதிப்பும் சகிப்புத்தன்மையும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“மலேசியா என்பது பல்வேறு இன, மத மக்களின் ஒருமித்த வாழ்வால் சிறப்பாக விளங்கும் நாடாகும். ஒவ்வொருவரும் தங்களது திருநாட்களை கொண்டாடும் போது, ஒற்றுமை, மதிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவைகளை பாதுகாக்க வேண்டும். இந்த பெருமைக்குரிய ஒருமைப்பாடே மலேசியாவின் தனித்துவமான அம்சம்,” என்றார்.
தைப்பூசம், மத மற்றும் பண்பாட்டு வித்தியாசங்களை பிரிவினையாக அல்ல, பலமாக பார்க்க வேண்டும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இருப்பதாகவும், இது தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும் என அவர் கூறினார்.
*”பத்து மலை, பினாங்கு மற்றும் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் நடக்கும் ரத ஊர்வல்கள், காவடி எடுத்தல் மற்றும் பக்தி நிகழ்வுகளை காணும் போது, நாம் *தேசிய ஒற்றுமை குறித்து உறுதிமொழி எடுக்க வேண்டும்,” என்றார்.
தமிழ் மாதமான தை மாதம் முழு நிலவுடன் வரும் தைப்பூசம், முருகப் பெருமான் தாயார் பார்வதியிடமிருந்து வேல் பெற்ற நினைவாக, நன்மையின் வெற்றியை குறிக்கும் புனித நாளாக கொண்டாடப்படுகிறது.
– வீரா இளங்கோவன்