Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

Addis Ababa-வில் பிரதமர் அன்வாரின் இரண்டாம் நாள் – வரவேற்பு விழா, வணிக கூட்டம் மற்றும் இருதரப்பு சந்திப்புகள்

Picture : Awani

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெறும் தனது இரண்டாவது நாள் பணிப்பயணத்தில், பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். மலேசியா–எத்தியோப்பியா உறவை வலுப்படுத்தும் வகையில், அரசு மட்டத்திலும், வணிக மட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன.

காலை நேரத்தில், பிரதமர் அன்வார் அவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இது மலேசியா மற்றும் எத்தியோப்பியா இடையேயான நீண்டகால நட்பு மற்றும் தூதரக உறவைக் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. அதன்பிறகு, இரண்டு நாடுகளின் தலைவர்கள் இடையே குறுகிய கலந்துரையாடல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, வணிக மையக்கூட்டமான Business Forum நடைபெற்றது. இதில், இரு நாடுகளின் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர். மலேசியா மற்றும் எத்தியோப்பியா இடையே வணிக வாய்ப்புகள், புதிய முதலீட்டுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும் இதில் விவாதித்தனர்.

முக்கியமாக, இருதரப்பு சந்திப்புகள் (Bilateral Meetings) மலேசியாவின் சர்வதேச உறவை விரிவாக்கும் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது. எத்தியோப்பிய தலைவர்களுடன் அன்வார் பல பிரிவுகளில் – பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற துறைகளில் – ஒத்துழைப்பைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பயணம் முழுவதும், மலேசியாவின் உலகளாவிய நிலையை உயர்த்தவும், ஆப்ரிக்கா கண்டத்துடனான உறவை வலுப்படுத்தவும் பிரதமர் அன்வார் கவனம் செலுத்தியுள்ளார். இந்த உறவு, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Scroll to Top