
சிம்பாங் ரெங்காம், 21 பிப்ரவரி — சிம்பாங் ரெங்காம், மாச்சாப் பகுதியில் பிப்ரவரி 10 திகதி அன்று நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜொகூர் போலீஸ் தலைவர், டத்தோ மு. குமார் தெரிவித்ததாவது, 34 முதல் 41 வயதிற்குள் உள்ள சந்தேகநபர்கள் பிப்ரவரி 19 அன்று மதியம் 12.30 மணியளவில் கம்போங் மலாய் மஜிடீ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து Sig Sauer ரக துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், சந்தேகமான போதைப்பொருள் மற்றும் ஆறு கைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் துப்பாக்கி இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், நான்கில் மூன்று பேர் மெத்தாம்பிட்டமின் (Meth) போதைப்பொருளுக்கு நேர்மறையாக பதிலளித்துள்ளனர்.
இந்த கைது மூலம் நான்கு குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், பிப்ரவரி 23 வரை அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேன் டைகர் என அழைக்கப்படும் 32 வயது சந்தேகநபர் இன்று க்ளுவாங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்.
-யாழினி வீரா