
பெட்டாலிங் ஜெயா, 9 ஜூன் : அரசு அங்கீகாரம் பெறாத மின் சாதனங்களை பயன்படுத்துவது, உங்கள் வாழ்க்கையும், உங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பும் என்பவற்றை சூதாட்டமாக மாற்றும் செயலாகும் என மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
SIRIM-ST லேபிள் இல்லாத சாதனங்கள் அதிக வெப்பம், குறுகிய சுற்று (short circuit) மற்றும் மின்சாரம் தாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. SIRIM-ST என்பது SIRIM QAS International நிறுவனமும், சுருஜெயா தெநாகா (ST) நிறுவனமும் இணைந்து வழங்கும் பாதுகாப்பு அங்கீகாரச் சான்றிதழ்.
“இந்த லேபிள் இல்லாமல் ஒரு சாதனம் இருக்கிறது என்றால், அது பாதுகாப்பு சோதனையை கடந்து செல்லவில்லை என்று அர்த்தம்,” என சிரிம் அதிகாரி முகமட் இஸ்கந்தர் தெரிவித்தார். மலேசியாவில் வழக்கமான மின் அழுத்தம் 230V என்பதால், 100V க்கான சாதனம் பயன்படுத்தப்படும்போது அது வெடிப்பு மற்றும் தீப்பற்றி வீடு முழுவதும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவர் கூறினார்.
2002 முதல் 2022 வரை, 570 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 1,200ற்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத சாதனங்கள் கடந்த ஆண்டு அகற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில வணிகர்கள் இதை முக்கியமாக கருதாமல் விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள், மின் சாதனங்களை வாங்கும் போது SIRIM-ST லேபிள் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-யாழினி வீரா



