
Picture : Awani
மலேசியாவின் வரலாற்றில் மிகப் பெரிய நிதிப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும் 1MDB சர்ச்சை, பல ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் சர்வதேச மதிப்பிற்கும் பெரும் சவால் அளித்தது. இந்த பின்னணியில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்ததாவது, 1MDB-க்கு தொடர்பான RM42 பில்லியன் கடன் முழுமையாகச் settlement செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பது தேசிய நிதி மேலாண்மைக்கு முக்கியமான முன்னேற்றமாகும்.
பிரதமர் தெரிவித்ததாவது, இந்தக் கடன்களை இறுதியாகச் செலுத்துவதற்காக அரசு பல ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்தது. அதற்காக கூடுதல் கடன்கள் எடுக்காமல், நாட்டின் வருவாய் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை திறமையாகப் பயன்படுத்தியதுதான் இந்த சாதனையை உருவாக்கியுள்ளது என்றார். இது, நாட்டின் நிதி ஒழுங்கை உறுதியாக்குவதோடு, எதிர்காலத்தில் பொது நிதி மேலாண்மை மேலும் வெளிப்படையாக இருக்கும் என்பதையும் உறுதி செய்கிறது.
அவர் மேலும் கூறியதாவது, 1MDB போன்ற சர்ச்சைகள் இனி மீண்டும் மலேசியாவில் உருவாகாத வகையில், அரசாங்கம் நிதி கட்டுப்பாடுகள், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இது மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கும் உதவுகிறது.
1MDB பிரச்சினை நாடு முழுவதும் நீண்டகால அரசியல் விவாதங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் உருவாக்கியது. எனினும், கடனால் ஏற்பட்ட நிதித் தடை நீக்கப்பட்டுள்ளதால், தேசிய பொருளாதார வளர்ச்சி பாதையில் அரசு மேலும் உறுதியாக முன்னேறலாம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



