Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

கடும் கனமழை எச்சரிக்கை: 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்

படம்: ஊடகம்

புது டெல்லி, 6 ஜூலை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடுமையாக தாக்கம் ஏற்படுத்தியுள்ளதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தில் சில இடங்களை உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு புயல் மற்றும் பெருமழை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவின் கொங்கண் மற்றும் மும்பை பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் பிரயாக் ராஜ், உத்தரகாண்ட் மாநிலத்தில் டெஹராடூன், நைனிதால் உள்ளிட்ட மலைப்பகுதிகள், பீகார் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்கள், மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகிய இடங்களில் தீவிர மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், தேனி மற்றும் நீலகிரி பகுதிகளிலும் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மழை மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என வானிலை ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

-ஸ்ரீ

Scroll to Top