
படம் : கூகுள்
இந்தியா, 16 மார்ச்- ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது.
நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் சீருடையின் எண் 18, இந்த சீசனும் 18. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி அணி லீக் சுற்றில் முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வியக்க வைக்கும் வகையில் கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து இருந்தது அறிந்ததே.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்கள் இருவருமே இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். பொறுத்திருந்துஹான் ஆட்டத்தைப் பார்ப்போமே!
-ஶ்ரீஷா கங்காதரன்