
ஜோகூர், 28 ஜனவரி — ஜோகூர் தாமான் அபாட் பகுதியில் ஜனவரி 10 ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்பட்ட கடத்தல் முயற்சியின் புகார் உண்மையற்றது என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த தகவலை ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் தொழில்நுட்ப ஆதாரங்களும், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்தவழி அப்பெண் கடத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
நாற்பத்தைந்து வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த பெண், ஜனவரி 22 அன்று இந்த புகாரை பதிவு செய்தார். அவர் பொய்யாகக் கூறியதாவது, தாமான் அபாட் பகுதியில் அவரை ஒரு பெண் அணுகி, சீனப் புத்தாண்டு தொடர்பாக மாக மருந்து கலந்த தேநீர் விற்க முயன்றதாகவும், இதனால் தனக்கு மயக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
இந்த பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால் மக்கள் மத்தியில் களங்கத்தை ஏற்படுத்தியது. ஜோகூர் போலீஸ் தலைவர் குமார், சமூக ஊடகங்களில் பரவிய இந்த சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு பய உணர்வை தூண்டும் விதமாக இருந்தாக குறிப்பிட்டார்.
அந்த பெண்ணுக்கு இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செக்க்ஷன் 182 கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படும். பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை தவிர்க்க மிகவும் முக்கியம் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
-வீரா இளங்கோவன்