Tazhal Media – தழல் மீடியா

/ Jul 22, 2026
Latest News
tms

பெண்ணின் வலிமை – TNB-யில் நம்பிக்கையை ஏற்றிய டாஷேனி

கோலாலம்பூர், 19 அக். –மின்சாரத் துறையைப் பெரும்பாலும் ஆண்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் ஒளிரும் ஒருபெண் — டாஷேனி பழனிசாமி, Tenaga Nasional Berhad (TNB) நிறுவனத்தின் திட்டப் பொறியாளராக பணியாற்றி, புதிய நம்பிக்கையின் தீபத்தை ஏற்றி வருகிறார்.

அவரின் சாதனை, பாலினத்தால் வரையறுக்கப்படுவதல்ல; மாறாக, தலைமையின் வலிமை, தொழில்நுட்ப அறிவு, மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாகும்.TNB, தனது நிறுவனக் கொள்கைகளில் பல்வேற்றம் (Diversity), சமத்துவம் (Equity), மற்றும் சேர்க்கை (Inclusivity) ஆகியவற்றை ஒரு கோஷமாக அல்லாது, சமூக நீதிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்குமான உண்மையான இயக்கமாக முன்னெடுத்து வருகிறது.

இந்த இயக்கத்தின் முகமாக டாஷேனி திகழ்கிறார். பெண்கள் வேலைப்பகுதியில் மட்டுமல்ல, தலைமைப் பொறுப்பிலும் சிறக்க முடியும் என்பதை நிரூபித்தவராக. இது ஒரே ஒருவரின் வெற்றிக் கதை அல்ல; இது ஒரு அமைப்பின் மாற்றத்தின் சின்னம். இது நீதிமிக்க, பிரகாசமான, தைரியமான மலேசியாவின் முகம்.

– யாழினி வீரா

Scroll to Top