
கோலாலம்பூர், 24 பிப்ரவரி — தற்போது 18 மலேசிய ஊடக நிறுவனங்களின் TikTok கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி (MCMC) டிக்டாக் நிறுவனத்துடன் தொடர்புகொள்ளும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அண்மையில் பாத்தாங் காலியில் பள்ளிவாசலில் நடந்த சிறுமி மீதான பாலியல் சம்பவத்தை பற்றி செய்தி வெளியிட்டதற்காக இந்த 18 ஊடக நிறுவனங்களின் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
“டிக்டாக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) அதிகமாக செயல்படுவதால் ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் சாதாரண பயனர் பதிவுகளையும் புரிந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு டிக்டாக் ஊடக கணக்குகளின் செயல்பாட்டை மீளாய்வு செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பை அவர் பெர்னாமா நிறுவனத்தால் நடத்தப்பட்ட “AI in the Newsroom” நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்