Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

இந்திய பெண்களைகளுக்கு (PENN ) திட்டத்தின் வாயிலாக RM32.65 மில்லியன் நிதியுதவி – துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன்

Picture: Bernama

கோலாலம்பூர், 24 பிப்ரவரி — இந்தியப் பெண் தொழில்முனைவர்களுக்கு (PENN) திட்டத்தின் கீழ், 2024 டிசம்பர் 31 வரை மொத்தம் 3,577 இந்திய பெண்கள் RM32.65 மில்லியன் நிதியுதவியை பெற்றுள்ளனர் என தொழில் முனைவோர் மேம்பாடு  கூட்டுறவுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அமானா இக்தியார் மலேசியா (AIM) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்திய பெண்களை தொழில்முனைவோர்களாக வளர்த்தும், அவர்களது குடும்ப வளர்ச்சிக்கு வழிவகுத்தும் வருகிறது.

தொழில் முனைவு வளர்ச்சிக்கு மகளிர், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களை ஊக்குவிப்பதற்காக, தொழில் பயிற்சி, தொழில்நுட்பம், திறன்கள், மற்றும் வணிக மேலாண்மை பயிற்சிகளை வழங்குவதில் KUSKOP மற்றும் அதன் நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன,” என்று துணை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2024 ஏப்ரல் 13 அன்று அறிமுகமான PENN திட்டத்திற்காக RM50 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய தொழில்முனைவர்களுக்காக KUSKOP நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார். INSKEN நிறுவனத்தின் அடிப்படை தொழில் முனைவு பயிற்சிகள், தொழில் சார்ந்த பயிற்சிகள், மற்றும் வணிக ஆலோசனைச் செஷன்கள் மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. 2024-இல் மொத்தம் 287 வீடுதொழில் நடத்தும் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், TEKUN Nasional Bhd நிறுவனம், 2024-இல் 649 பெண்களுக்கு ‘Online Financing Scheme’ (SPOT) வழங்கியுள்ளது.

ராக்யாட் வங்கி நிறுவனத்தின் RAKYATPreneur B40 (iTekad) திட்டம் மூலம் 140 B40 மகளிர் தொழில்முனைவோர் கடந்த ஆண்டு பயனடைந்தனர். இந்தத் திட்டம், நிதி மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது என ராமணன் தெரிவித்தார்.

-யாழினி வீரா

Scroll to Top