Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசிய மாநாடு

Picture: KBBT

கோலாலம்பூர், 23 பிப்ரவரி — மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் 54-வது தேசிய பேராளர் மாநாடு வரும் பிப்ரவரி 23, 2025 அன்று கோலாலம்பூரில் உள்ள IKP Bellarmy மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை மலேசிய இளைஞர் பேரவையின் தலைவர் திரு. முகாமட் இஸாத் அபிஃபி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்ற உள்ளார். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவர் திரு. முருகன் மணியம், அனைத்து உறுப்பினர்களையும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு, நிகழ்வை சிறப்பிக்க அழைக்கிறார்.

தமிழ் இளைஞர்களின் தலைமைத்துவ திறன் வளர்ச்சிக்காக மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து பல பயிற்சி மற்றும் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இம்மாநாட்டில், கல்வி, பண்பாடு, சமூக மேம்பாடு மற்றும் தலைமைத்துவ திறன் ஆகிய துறைகளில் தமிழ் இளைஞர்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு முக்கியமான தலைப்புகள் விவாதிக்கப்படும்.

இம்மாநாடு, மலேசியத் தமிழ் இளைஞர்களுக்கான ஒரு முக்கியமான தளமாக அமையும். சமூகப் பணியில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது வலைப்பின்னல் உருவாக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து திறந்த மனதுடன் விவாதிக்கவும், புதிய வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் இது ஒரு அரிய சந்தர்ப்பமாக இருக்கும்.

மாநாட்டில் தமிழ் இளைஞர் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல முக்கியமான நபர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, அனைத்து உறுப்பினர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top