Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக மலேசியாவை மாற்றும் நோக்கில் டிஜிட்டல் அமைச்சகம் உறுதி – கோபிந்த் சிங்

கோலாலம்பூர், 4 நவ. –
மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவாக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டு முக்கியமான மைல்கல்லாக அமையும் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா (Budget 2026) குறித்த நாடாளுமன்ற விவாதம், டிஜிட்டல் அமைச்சகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முக்கிய கருத்துக்களை பரிமாறும் வாய்ப்பாகும்.

இந்த நோக்கை அடைவதற்காக, டிஜிட்டல் அமைச்சகத்துக்கு மொத்தமாக ரி.ம. 1.36 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரி.ம. 248.5 மில்லியன் இயங்கும் செலவுகளுக்காகவும், ரி.ம. 1.11 பில்லியன் வளர்ச்சி செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நான்கு முக்கியக் கொள்கை துறைகளை மையமாகக் கொண்டுள்ளது: டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் நம்பிக்கை வலுப்படுத்தல், ஆட்சி மேம்பாடு மற்றும் டிஜிட்டல் திறனும் அறிவார்ந்த சமூகத்தையும் உருவாக்குதல்.

கோபிந்த் சிங் மேலும் கூறியதாவது, 2026ஆம் ஆண்டின் கீழ் பல புதுமையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவை 30,900 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், 2030ஆம் ஆண்டுக்குள் 98% 5G இணைப்பை அடைதல், புதிய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியவை எனத் தெரிவித்தார்.

“மலேசியாவின் டிஜிட்டல் எதிர்காலம் பிரகாசமானது. நாமெல்லாம் ஒன்றிணைந்து உழைத்தால், இந்த இலக்கை நிச்சயம் அடைவோம்,” என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

-யாழினி வீரா

Scroll to Top