
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது வாழ்க்கையில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி, “பாடும் நிலா” என்றழைக்கப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்கள் முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த முதன்மை சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை” என பெயரிட உத்தரவிட்டார்.
அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் “எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை” என்ற பெயரிடப்பட்ட சாலை வழிகாட்டி பலகை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில், எஸ்.பி.பி.சாரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு, அவருடைய இசைச் சாதனைகளை போற்றும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
தொட்டுத் திரும்பும் தென்றலாக, நம்முடன் இருப்பவர் எஸ்.பி.பி!
காற்றில் கானமாக வாழும் அவர் புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்!