Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘காளிதாஸ் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

படம் : சென்னை விஷன்

சென்னை, 9மார்ச்- பரத் நடித்துள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘காளிதாஸ்’. அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காளிதாஸ் 2’. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ள இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியிருக்கிறார்.

‘காளிதாஸ் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுரேஷ் பாலா, இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தினை ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top