
புக்கிட் திங்கி ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவஸ்ரீ சுரேஷ்குமார் குருக்கள் மற்றும் நாடறிந்த அறிவிப்பாளரும் ஆசிரியரும் கலைஞருமான தமிழ் வாணி அவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்திற்கேற்ப, மங்கல நிகழ்வுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் மற்றும் சொல்லின் செல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் பத்துமலை திருத்தல ஆலய தலைவர் மேன்மைமிகு டான் ஸ்ரீ டத்தோ நடராஜா மற்றும் மஹிமா தலைவரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ ந.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்களின் வருகை விழாவிற்கு சிறப்பு சேர்த்ததோடு, மணமக்களின் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தது.
புத்துயிர் வாழ்க்கையை தொடங்கும் மணமக்களுக்கு உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களின் திருமண வாழ்வு நலமுடனும் மகிழ்ச்சியுடனும் தொடர தழல் மீடியாவின் வாழ்த்துக்கள்! 💐💖