Tazhal Media – தழல் மீடியா

3:21:02 PM / Mar 16, 2025
Latest News

நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அரிசி உற்பத்தி – கேபிகேஎம் முக்கிய தீர்மானம்

Picture: Google

கோத்தா கினாபாலு, 15 பிப்ரவரி — நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தித் தொழிலில் நிலையான வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை வலுப்படுத்த அரசு முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான முதல் அடியாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு (KPKM) இந்த ஆண்டில் அத்தொழிலுக்கான முழுமையான சீர்திருத்தங்களை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, உள்நாட்டு அரிசி விநியோகத்தை மேம்படுத்துவதோடு, நெல் உற்பத்தி தொழிலின் தரத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், KPKM துணை அமைச்சர் டத்தோ அர்துர் ஜோசப் குருப், சபாவில் நெல் உற்பத்தியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“நெல் என்பது உணவுத் தேவையை மட்டுமின்றி, சபா மக்களின் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஒன்றிணைந்த முக்கிய விடயமாகும். இருப்பினும், தற்போதைய நிலைமை திருப்திகரமாக இல்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், சபாவில் நெல் மற்றும் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது. இதை மாற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த புதிய திட்டங்கள், உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக ஆதரவை வழங்குவதோடு, நீண்ட காலத்திற்கான உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தா கினபாலுவில் தனது அமைச்சின் பணியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை எடுத்துக்கூறினார்.

-வீரா இளங்கோவன்