Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்க வேண்டும் – நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை

சென்னை, 1 நவ. –
ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது பெருமை சேர்த்துள்ள நிலையில், அந்த அணியின் துணை கேப்டனாக விளையாடிய சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகை மற்றும் ஒரு வீடு வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, “கண்ணகி நகர் பகுதியில் இருந்து வந்து நாட்டிற்கு பெருமை சேர்த்த கார்த்திகா போன்ற இளம் வீராங்கனைகள் பெருமை பெறும் வகையில் அரசாங்கம் முன்வர வேண்டும். அரசு முன்னதாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கியுள்ளது. அதுபோல இந்த இளம் வீராங்கனைக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும்,” என்றார்.

மன்சூர் அலிகான் தனது உரையில் மேலும் கூறியதாவது, “பின்னணி குறைந்த சமூகத்திலிருந்து வந்த இளம் பெண் ஒருவர் இந்தியாவை தங்கத்தில் உயர்த்தியிருக்கிறார். இது அனைவருக்கும் ஒரு பெருமை. அவரின் சாதனையை கௌரவிக்கும் விதமாக அரசு ஒரு வீடு மற்றும் ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்கினால் அது மற்ற இளைஞர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்,” என தெரிவித்தார்.

அவரது கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Scroll to Top