Tazhal Media – தழல் மீடியா

/ Mar 16, 2025
Latest News

லெம்பா பந்தாய் தொகுதியில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா

கோலாலம்பூர், 19 – ஜனவரி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சரான திரு. பாஹ்மி பாத்சில் ஏற்பாடு செய்த பொங்கல் திருவிழா இன்று பந்தாய் டாலாமில் உள்ள IWK எக்கோ பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வுகள் என கொண்டாட்டம் மகிழ்ச்சியுடன் நிறைந்தது.

மூவின மக்களின் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளில் ஒரே நாளில் பங்கேற்கும் வாய்ப்பை பெருமையுடன் தெரிவித்த பாஹ்மி, “மலேசியாவில் மட்டுமே இது சாத்தியம். இளைய தலைமுறை நமது பாரம்பரியத்தை காப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டும்,” என்று தனது உரையில் கூறினார்.

இந்த விழாவில் 50 மண் பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்வின் மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் கலந்துமிசைந்து, ஒற்றுமையும் கலாச்சார மரியாதையும் மேம்பட்டது. லெம்பா பந்தாய் தொகுதியில் இப்படிப் போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதையும் பாஹ்மி குறிப்பிட்டார்.