
தென்கொரியாவின் திரு லீ ஜே மியுங் (Lee Jae-myung) எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப் பணியைத் தொடங்கவிருப்பதாகத் திரு லீ தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேல் விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை. தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் உறுதியாகக் கூறவில்லை.
தென்கொரியா அதிபர் தேர்தலை வரும் ஜூன் 3ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை (4 ஏப்ரல்) அதிபராக இருந்த திரு யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) பதவி விலகல் உறுதிசெய்யப்பட்டது.
திடீரென்று ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகத் திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
-இளவரசி புவனஷங்கரன்