
சுபாங் ஜெயா, ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட வாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும், தேவையான உதவிப் பொருட்களை வழங்கவும் ம.இ.கா. பிரிகேட் மற்றும் ம.இ.கா. சிலாங்கூர் குழு மச்ஜித் புத்ரா ஹைட்ஸில் அமைக்கப்பட்ட தற்காலிக மையத்துக்கு (PPS) வருகை தந்தது. மேலும், இப்பாதிப்பில் மும்முரமாக செயல்பட்டு வரும் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த சம்பவம் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளது, குறிப்பாக இஸ்லாமியர்கள் ஹரி ராயாவை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது. பல வீடுகள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன, மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள மையத்தில் அவர்களின் துயரக் காட்சிகள் கண்கலங்கச் செய்கின்றன.
ம.இ.கா. தேசியப் பிரிவின் செயற்குழு உறுப்பினரும் ம.இ.கா. பிரிகேட் தேசியத் தலைவருமான ஆண்ட்ரூ டேவிட், அரசாங்க முகமைகள் மற்றும் அனைத்து இன மக்களும் இணைந்து உதவியதற்கு தனது நன்றியினைப் தெரிவித்தார். மலேசியர்களின் ஒற்றுமையே நமது நாட்டின் வலிமையென அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிள்ளான் மாவட்ட மலேசியா ரெட்கிராசு தலைவரான டத்தோ டாக்டர் ஜோ சரவணன் மற்றும் அவரது குழுவினரின் tireless பணிகளுக்கு அவர் சிறப்பு நன்றி தெரிவித்தார்.
“இத்தகைய பேரழிவுகளிலிருந்து அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
-யாழினி வீரா