Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

ஜெரீக் அருகே பேருந்து விபத்தில் உப்சி மாணவர்கள் 15 பேர் உயிரிழப்பு

Picture: Online

கேரிக், 9 ஜூன்: கேரிக் – ஜெலி திமூர்-பாரத் நெடுஞ்சாலையில், தஸிக் பாண்டிங் அருகே இன்று அதிகாலை நடந்த ஒரு பயங்கர விபத்தில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில், சுல்தான் இத்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (UPSI) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், ஒரு பெரோடுவா அல்சா வகை பல்நோக்கு வாகனமும் சம்பந்தப்பட்டுள்ளன.

அஸ்ட்ரோ அவானி வெளியிட்ட ஆரம்ப தகவல்களின் படி, இந்த பேருந்து நேற்று இரவு 9 மணியளவில் தெரெங்கானுவின் ஜெர்டெஹ் பகுதியில் இருந்து, பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கி பயணிக்கையில், விபத்தில் சிக்கியது.

ஹுலு பேராக் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையத்தின் (PKOD) தகவல்படி, இந்த விபத்து குறித்து காலை 1.10 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டது. விபத்திடத்தில் 13 பேர் உடனடியாக உயிரிழந்தனர், மேலும் இருவர் கெரிக் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இது தவிர, ஏழு பேர் தீவிர சிகிச்சை (மெராஹ் சோன்), 20 பேர் நடுத்தர நிலை (குனிங் சோன்) மற்றும் ஆறு பேர் லேசான காயங்களுடன் (ஹிஜௌ சோன்) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-யாழினி வீரா

Scroll to Top