Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

‘HEARTS OF HARRIS’ இசை விழா இன்று கோலாலம்பூரில் இசை ரசிகர்களை மிரளவைக்கும்!

கோலாலம்பூர், ஜூலை 5: மறக்க முடியாத இசை அனுபவமாக எதிர்பார்க்கப்படும் ‘HEARTS OF HARRIS – THE FINAL ENCORE’ என்ற இசை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூரில் சிறப்பாக நடைபெற உள்ளது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை MALIK STREAMS நிறுவனம் மிகுந்த பிரமாண்டத்துடன் ஏற்பாடு செய்துள்ளது. இசை உலகில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது தனித்துவமான இசை நடை, மெலடி பாடல்கள் மற்றும் இசைப் பிரியர்களை கவரும் பீட்ஸ்களால் தனிச்சிறப்பைப் பெற்றவர் என்பதால், இந்தக் கச்சேரி இசை காதலர்களுக்கு ஒரு மாறக்கமுடியா இரவாக அமையவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு புக்கிட் ஜாலிலில் உள்ள அக்சியாத்தா அரங்கத்தின் வாசல்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படும். அதன்பின், இரவு நேரத்தில் நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

பாடகர்களாக கார்த்திக், நரேஷ் ஐயர், திவாகர், சைந்தவி மற்றும் மற்ற பிரபலங்களும் கலந்துகொண்டு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உயிர் புகுத்தவுள்ளார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மனதைக் கவர்ந்த பாடல்களை நேரலை இசையுடன் ரசிக்க வைக்கத் தயாராக இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஹாரிஸ் ஜெயராஜின் இறுதிக் கச்சேரியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ரசிகர்களுக்கு வழங்கும் இசை காணொளி அனுபவம் இதுவரை கேட்டிராத அளவுக்குச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய இசை ரசிகர்களுக்கு இது ஒரு நினைவில் நிற்கும் இரவாக அமையப்போகிறது.

Scroll to Top