Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

UPSI மாணவர்கள் விபத்து; போலீசார் தீவிர விசாரணை

Picture: TV3

கெரிக், 9 ஜூன்: UPSI மாணவர்கள் பயணித்த பேருந்து தொடர்பான கோர விபத்தின் காரணங்களை உறுதி செய்ய, போலீசார் முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில், டிரைவர் பராமரிப்பு தவறு மற்றும் வாகன தொழில்நுட்ப கோளாறு ஆகிய அம்சங்கள் முக்கியமாக பரிசீலிக்கப்படுகின்றன என, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

இந்த விபத்து 1987ம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1)யின் கீழ் விசாரிக்கப்படுகிறது. வாகனத்தின் நிலை, டிரைவரின் தகுதி, பழைய சம்மன் பதிவுகள் மற்றும் விபத்துக்கான வேகம் என அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. PUSPAKOM, MIROS மற்றும் JPJ ஆகிய அமைப்புகளின் உதவியுடன் தொழில்நுட்ப ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பேருந்து தற்போது பீரோடுவா அல்சா வாகனத்தின் பின்னில் மோதியதாக தெரிவிக்கப்பட்டது; நேருக்கு நேர் மோதல் இல்லை. விபத்து நடந்த இடம் இருள் மிகுந்த வளைவுகள் உள்ள சாலையாக இருந்தது.

44 பேரைக் கொண்ட பேருந்தில் 42 UPSI மாணவர்கள் இருந்தனர். 13 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 2 பேர் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் இப்போதும் நடைபெற்று வருகின்றன.

-யாழினி வீரா

Scroll to Top