
சிப்பாங், 15 ஏப்ரல்: சீனா நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் இன்று மாலை 6.30 மணிக்கு, மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராகிம் அவர்களின் அழைப்பின் பேரில், மூன்று நாள் அரசியல் பயணமாக மலேசியாவிற்கு வருகை தந்தார். அவரின் விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள பூங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.
அதிபரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ மொஹமட் ஹசன், போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் மற்றும் சீனாவின் மலேசியத் தூதுவர் ஒயாங் யூஜிங் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அதிபர் காவல் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் மலாய், சீனம், இந்தியம் கலந்த பாரம்பரிய இசைக்கூட்டத்துடன் அவருக்கு பண்பாட்டுச் செல்வாக்குள்ள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வருகையின் போது, இஸ்தானா நெகராவில் அரசருடன் சந்திப்பு, அரச விருந்து மற்றும் பிரதமருடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதிக்க நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணம், 2025ஆம் ஆண்டு அதிபரின் முதல் வெளிநாட்டு பயணமாகும். கடந்த 2013ஆம் ஆண்டின் பின்னர் மலேசியாவுக்கு அவர் வருகை தருவது இது இரண்டாவது முறை. 50 ஆண்டுகளாக இருநாடுகளும் பலதரப்பட்ட உறவுகளை பேணி வருகின்றன. 2024இல் இருநாட்டுகளுக்கிடையே RM484.12 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
மலேசியா, ASEAN-Çhina உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா