
உலக சமூக நீதி நாள் என்பது நீதியின்மைக்கு எதிராக குரல் எழுப்பி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தினமாகும். சமூக அநீதி, புறக்கணிப்பு மற்றும் வேறுபாடுகளுக்கு எதிராக போராட, உலகளாவிய பிரச்சினைகளை அடையாளம் காண மற்றும் தீர்வுகளை முன்வைக்க இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. அரசுகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்த தினத்தை சமூக நீதியில் நாம் எவ்வளவு முன்னேறி உள்ளோம் என்பதை மதிப்பீடு செய்யவும், எதிர்கால முன்னேற்றத் திட்டங்களை வகுப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வரலாறு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி, சர்வதேச தொழிலாளர் ஒருங்கிணைப்பு (ILO), நல்ல உலகமயமாக்கலுக்காக சமூக நீதி முக்கியம் என்பதில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இது 1919ம் ஆண்டில் ILO அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதற்கு பின், கொள்கைகள் மற்றும் மாநாட்டு தீர்மானங்களை உருவாக்கிய பின், கிடைத்த மூன்றாவது பெரிய ஒப்புதல் ஆகும்.
முக்கியத்துவம்
உலக சமூக நீதி நாள் நலிந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க உதவுகிறது. சமூக சமத்துவம், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு குறைபாடு, பாலின வேறுபாடு, கல்வியில் சமத்துவம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை உலகம் முழுவதும் முன்னிறுத்துகிறது.
இந்தாண்டு, சர்வதேச தொழிலாளர் ஒருங்கிணைப்பு (ILO), உலகம் முழுவதும் ஆறு முக்கிய நகரங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, சமூக நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தினத்தை கடைப்பிடிப்பதன் மூலம் சமூக நீதியை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
உலகம் முழுவதும் அனைவரும் சம உரிமைகளை பெற்றிட, இத்தகைய தினங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சமூக நீதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய செய்தியாகும்.