
காஜாங், 3 பிப்ரவரி — நேற்று செமினி வட்டாரத்தில் திரு. ஸ்ரீதரன் நல்லையாவை தோற்றுநராக கொண்டுள்ள “கார சாரம்” உணவகத்தின் மற்றுமொரு கிளையின் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நாட்டின் புகழ்பெற்ற நடிகையும் எம்.கே.யு மலேசிய கலை உலகத்தின் ஆலோசகருமான திருமதி. சுசிலா தேவி கலந்துக்கொண்டார். செமினி சுற்று வட்டார மக்களுக்கும் உணவுப் பிரியர்களுக்கும் தனித்துவமான அறுசுவை அனுபவத்தை “கார சாரம்” உணவகம் வழங்கும் என் தெரிவித்தார். காலை 11:00 மணி தொடங்கிய இத்திறப்பு விழாவில் நண்பர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
நாடு முழுக்க பல கிளைகளைக் கொண்ட கார சார உணவகம் வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதரவினால் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருகிறது. இதனிடையே, பினாங்கில் உள்ள கார சாரம் உணவகம், drive-thru வசதியை கொண்டதாகும். மலேசியாவில் drive-thru வசதியை கொண்ட முதலாவது இந்திய உணவகம் என்பதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-வீரா இளங்கோவன்