Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

துருக்கியில் திடீர் நிலநடுக்கம்…

படம் : இணையம்

அங்காரா, 3 ஜூன்- துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 என்ற அளவில் பதிவானது. துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமாக இருக்கிறது மர்மாரிஸ். இன்று (ஜூன்3) அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.17 மணிக்கு வீடுகளில் மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை துருக்கி பேரிடர் மேலாண்மை பிரசிடென்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. ‛‛நிலநடுக்கத்தால் 7 பேர் காயமடைந்துள்னளர். இவர்கள் பால்கனி மற்றும் ஜன்னல் வழியாக வெளியே குதித்தவர்கள் ஆவார்கள். கவலைப்படும் அளவுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

-ஶ்ரீஷா கங்காதரன்-

Scroll to Top