
நாட்டின் பண்பட்ட கலைஞரும் அறிவிப்பாளருமான திரு. முருகையா @ பாரதிக்கண்ணா அவர்கள் காலமானார். நேற்று தலைநகர் சோமா அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த கலைஞர்கள் அவரை பெட்டாலிங் ஜெயா மருத்துவமணைக்கு கொண்டுச்சென்றுள்ளனர் . தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்திருந்த வேளையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்று தெரிவிக்கப்பட்டது. சமீப காலமாக அவர் உடல்நலம் குன்றிருந்தார்.