Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

செகாமட்டில் போலீசாருக்கு லஞ்சம் வழங்க முயன்ற நபர் கைது

Picture : SPRM

ஜோகூர், 28 ஜனவரி — செகாமட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) போலீசாருக்கு லஞ்சம் வழங்க முயன்றது ஒரு நபரை கைது செய்துள்ளது.

30 வயதுடைய சந்தேகநபர் நேற்று மாலை 3 மணியளவில் செகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD) MACC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதின் பின்னணி பற்றி தகவலளித்த ஒருவரின் குறிப்பின் படி, டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தில் பயணம் செய்த அவர் மற்றும் நான்கு நண்பர்கள் போலீசாரால் சோதனை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் அடையாள அட்டைகளும் சரிபார்க்கப்பட்டது, அப்போது, அவர்கள் போதைப்பொருள் மற்றும் குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்ததாக தெரியவந்தது.

“அவர்களின் வாகனத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்களும், திருட்டு வேலைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கைது செய்த போது, சந்தேகநபர் போலீசாருக்கு 18,500 ரிங்கிட் லஞ்சமாக வழங்கி தப்பிக்க முயன்றார்,” என்று தெரிவித்தார்..

இதுகுறித்து ஜோகூர் ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் டத்தோ அஸ்மி அலியாஸ் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு MACC சட்டத்தின் பிரிவு 17(b) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top