Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2025
Latest News
tms

மலேசியாவில் முதன்முதலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் பிரமாண்ட இசைக் கச்சேரி

தமிழ்த்திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் மறக்கமுடியாத ஹிட் மெலடிகளை. தற்போது, அவரது ரசிகர்களுக்காக ஒரு தனிப்பட்ட பரிசாக, அவர் மலேசியா தரையில் தனது முதல் நேரடி இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி, City Production நிறுவனத்தின் ஏற்பாட்டில், One Visual Production நிறுவனத்தின் ஆதரவில் நடைபெறவுள்ளது. “Ready Set Bharadwaj – Live in Malaysia” எனும் தலைப்பில், இந்த இசைநிகழ்ச்சி ஜூன் 14, 2025 அன்று கோலாலம்பூரின் பிரபல Mega Star Arenaவில் நடைபெறவிருக்கிறது.

பரத்வாஜ் இசையமைத்துள்ள திரைப்படங்களின் பட்டியலில் காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், வசூல்ராஜா MBBS, திருட்டுப்பயலே, அசல், அரண்மனை உள்ளிட்ட பல வெற்றி படங்கள் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள், காலத்தை கடந்து ரசிகர்களின் மனதிலும், இசைத்துறையிலும் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளன. “ஓ பொடு”, “ஓர வார்த்தை கேட்க”, “ஓவ்வொரு பூக்களுமே” போன்ற பாடல்கள் இன்றும் காதலர்களின் பிளேலிஸ்டில் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் முழு இசைக்குழுவுடன் நேரடி பாடல் நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் மறக்கமுடியாத மேடை அனுபவங்கள் என அனைத்தும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKTFzreRvHXP1iQb0LpuTtTktLcX_m4fH4yl1ZhF5o1OOlxg/viewform பக்கம் வழி திறக்கப்பட்டுள்ளது. இசையையும், தருணங்களையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வை தவறவிடக்கூடாது என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இந்த இசை விழா, மலேசிய இசை ரசிகர்களுக்கான வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

Scroll to Top