Tazhal Media – தழல் மீடியா

/ Jul 31, 2026
Latest News
tms

ஜொகூர் பெக்கான் பலோவில் 38 ஆண்டுகளாக பாரம்பரிய சுவை காக்கும் சுரேஷ் குடும்பம்

ஜொகூர் மாநிலத்தின் பெக்கான் பலோ பகுதியில் கடந்த 38 ஆண்டுகளாக பாரம்பரிய உணவுகளை சுவையாக தயாரித்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றார் திரு. சுரேஷ் அவர்கள். தந்தையாரிடமிருந்து தொடங்கிய இந்த வியாபாரம் இன்றும் அதே அர்ப்பணிப்புடனும் சுவையுடனும் தொடர்கிறது.

திரு. சுரேஷ் அவர்கள் கூறுகையில், “என் தந்தை ஆரம்பித்த இந்த உணவகத்தை பாரம்பரிய சுவையையும், தரத்தையும் காத்து நடத்துவது எனக்கு பெருமை” என்றார். பல தசாப்தங்களாக பழோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் இவரது கடையில் சாப்பிட வருவது வழக்கமாகிவிட்டது.

அவரது கடையில் பாரம்பரிய உணவுகள், வீட்டு சுவையை நினைவூட்டும் வகையில் தயார் செய்யப்படுகின்றன. குறிப்பாக தாய் சமையலின் மசாலா வாசனையும், தமிழ்நாட்டு சுவையும் கலந்து இருப்பது அனைவரையும் கவர்கிறது.

பழோவுக்கு செல்லும் யாரும் இந்த சுவை மிக்க கடையை தவறாமல் பார்வையிட்டு சாப்பிடுமாறு மக்கள் கூறுகின்றனர். இது உணவின் சுவையையும், பாரம்பரியத்தின் பெருமையையும் இணைக்கும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

Scroll to Top