Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

பிரிக்பீல்ட்ஸில் நவம்பர் 23 அன்று “சங்கமம் 3.0” !

கோலாலம்பூர், 3 நவ. – தமிழ் இருமொழி பேச்சாளர்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய நிகழ்வாக “சங்கமம் 3.0” (Sangamam 3.0) வரும் 23 நவம்பர் 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று பிரிக்க்பீல்ட்ஸ் MARAZ Hall-இல் மாலை 3.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பான நிகழ்ச்சி District 102 Toastmasters International அமைப்பின் கீழ் செயல்படும் நான்கு தமிழ் கிளப்புகள் — அன்பு, மகாகவி, லவங்கம் மற்றும் திரிசூலம் — ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டின் தீம் “ஒவ்வொரு குரலும் பேசட்டும், உலகம் கேட்கட்டும்” என்பதாகும். இது தமிழ் பேச்சாற்றலின் வழியாக உற்சாகம், தலைமைத்துவம் மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டது.

சங்கமம் 3.0 நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்:

  • தமிழ் மொழியைப் பேச்சாற்றல் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் வளர்த்தல்
  • புதிய தமிழ் டோஸ்ட்‌மாஸ்டர்ஸ் கிளப்புகளை உருவாக்கல்
  • உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல்
  • சமூக இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் தமிழ் சமூகத்தில் ஊக்கமூட்டும் மேடையாக திகழ்தல்

நிகழ்ச்சியில் தலைமைத்துவம், உரையாற்றும் திறன் மற்றும் தமிழின் அழகை மையப்படுத்திய ஊக்கமான அமர்வுகள் இடம்பெறும். பதிவுசெய்யும் பங்கேற்பாளர்களுக்கு ரெஃப்ரெஷ்மெண்ட்ஸ் மற்றும் குண்டூஸ்கள் வழங்கப்படும்.

நுழைவு கட்டணம் RM20 ஆகும் (Rawang YLP மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இலவசம்). பதிவு நவம்பர் 15க்குள் முடிக்கப்பட வேண்டும்.

📞 தொடர்புக்கு:
சிவஜ்ஞானி நாகப்பன் DTM – +6012 925 9495
வீரா மனோ DTM – +6019 237 8513
ராமூ நாயர் CTM LD5 – +6018 909 9450
மாஸ்டர் அழகன் – +6014 669 1063

Scroll to Top