
கோலாலம்பூர், 20 பிப்ரவரி — மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) ட்ரோன் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகளை கடுமையாக மேற்கொள்வது நாட்டின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் மிகுந்த பொருத்தமான நடவடிக்கையாகும்.
மகீர் மலேசியா நிறுவனத்தின் தலைவர் டத்தோக் பி ஸ்ரீ கணேஸ் கூறுகையில், “இது ட்ரோன் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும். அதற்கு உளவு பார்வை, கடத்தல், மற்றும் தடையிலக்காக உள்ள பகுதிகளில் சட்டவிரோத நுழைவு போன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க இது அவசியமாகிறது.”
மேலும், “இது வெறும் கட்டுப்பாட்டு விதிமுறை அல்ல, இது ஒரு பாதுகாப்பு அவசியம்,” என அவர் கூறினார்.
அதேநேரத்தில், மற்ற நாடுகளைப் போல, மலேசியாவும் கடுமையான அபராதங்கள் மற்றும் ட்ரோன் பறக்கும் சாதனங்களை பறிமுதல் செய்வது போன்ற தண்டனைகளை அமல்படுத்த வேண்டும் என அரசிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
“சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது உள்ளூர் ட்ரோன் தொழில்துறையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்,” என அவர் மேலும் எச்சரித்தார்.
சர்வதேச விமான போக்குவரத்து தரவுகளின்படி, 2,500க்கும் மேற்பட்ட ட்ரோன் சம்பந்தமான பாதுகாப்பு மீறல்கள், விமானங்கள் அருகில் நிகழ்ந்துள்ளன. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளால் (FAA Part 107, EASA) அதிக கட்டுப்பாடுகளுடன் ட்ரோன் செயல்பாடுகள் சரியான வழியில் இருக்கின்றன என அவர் கூறினார்.
மலேசியாவும் இதே போன்று துல்லியமான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தவில்லை என்றால், நாடு வளர்ச்சியடைந்த ட்ரோன் தொழில் வாய்ப்புகளை இழக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
சமீபத்தில், CAAM ட்ரோன் இயக்கத் தேவைகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்ச 122 மீட்டர் உயரத்திற்கும் கீழ் பறக்கும், கேமரா இணைக்கப்பட்ட ட்ரோன்களும் கூட இப்போது அனுமதி பெற வேண்டியதாகும்.
-யாழினி வீரா