
ஸ்ரீ கேம்பாங்கான், 04 நவெம்பர் – ஸ்ரீ கேம்பாங்கான் பகுதியில் உள்ள Blue Water Estate அருகே, 24 வயது பெண் ஒருவர் காட்டுப்பகுதியில் உடல் கவிழ்ந்த நிலையில், ஆடை இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடல் விசாரணையில் பல இடங்களில் காயங்கள் மற்றும் சிதைவு உண்டு என்பதால், கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், மேல் விசாரணைக்காக இறந்த பெண்ணின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கூறியதாவது, ஆரம்ப விசாரணையில் இந்த சம்பவம் முற்றிலும் திட்டமிட்ட கொலைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில், மற்ற சந்தேக நபர்கள் மற்றும் சம்பவம் தொடர்பான சாட்சி வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
IPD Serdang போலீஸ் அதிகாரி Muhamad Farid Ahmad தெரிவித்தார், தற்போது குற்றச்சாட்டை மலேசியா Penal Code Section 302 படி கொலை பிரிவில் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தாலும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பொதுமக்களுக்கு, சம்பவம் தொடர்பான தகவல்கள் இருந்தால், உடனே காவல் நிலையம் அல்லது IPD Serdang – 03‑8074 2222 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த கொடுமையான சம்பவம், பெண் பாதுகாப்பு மற்றும் வீட்டில் நெருங்கிய உறவுகள் கூட சில நேரங்களில் அபாயகரமாக இருக்கலாம் என்பதற்கு ஒரு எச்சரிக்கை உணர்வாக உள்ளது. அதிகாரிகள் இதை தீவிரமாக விசாரித்து, நீதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
‑யாழினி வீரா



