
Picture : Awani
எத்தியோப்பியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு உலக நாடுகளில் அரிதாக காணப்படும் ஒன்றாக இருந்தது. எத்தியோப்பியாவின் பிரதமர் Abiy Ahmed Ali,, மலேசியா பிரதமரை அழைத்து செல்ல அதிகாரப்பூர்வ அரசுக் காரை நேரடியாக ஓட்டி வரவேற்றார். இது இரு நாடுகளுக்குமிடையேயான நட்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையின் உயர்ந்த அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
அன்வார் அடிஸ் அபாபாவில் வந்த கணத்திலேயே , எத்தியோப்பிய அரசின் மரியாதை மிக்க அரசியல் வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின், இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அபி அஹ்மட் சுயமாக காரை ஓட்டி பிரதமர் அன்வாரை நகரின் பல முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்றார். ஒரு நாட்டின் தலைவரே மற்றொரு நாட்டு தலைமையை தாமே காரில் அழைத்துச் செல்லுவது ஒரு பிரத்யேகமான நிகழ்வு என சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இரு தலைவர்களும் பொருளாதாரம், வர்த்தகம், விவசாயம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற துறைகளில் முன்னேற்றத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது குறித்து ஆழமான பேச்சுவார்த்தை நடத்தினர். அன்வார், ஆப்ரிக்கா கண்டத்துடன் மலேசியாவின் உறவை விரிவுபடுத்துவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், எத்தியோப்பியா காட்டிய இந்த நட்பான அணுகுமுறை, மலேசியாவின் உலகளாவிய மதிப்பை உயர்த்துவதோடு, எதிர்கால ஒத்துழைப்பிற்கான வலுவான அடித்தளமாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பயணம், இரு நாடுகளுக்குமான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.



