
படம் : மாலைமலர்
இந்தியா, 29 ஜனவரி- பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ராவணனின் தாய் கைகேசியாக ஷோபனா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
முன்னதாக, ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷோபனாவுக்குச் சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
-ஶ்ரீஷா கங்காதரன்