
தாம் தூம் என்று சண்டையிட்டு பின் சிறிது நேரத்தில் “அவள் அப்படித்தான் “என்று
கணவரும் “அவரை திருத்தவே முடியாது” என்று மனைவியும் சமாதானமாகி
வா எனக்கு வயிறு பசிக்குது
சோறுவை என்று சொல்ல
மனைவியும் சோறு வைத்து விட்டு
போகாமல் பக்கத்தில் இருந்த பரிமாறுவது தான் புரிந்தாலன வாழ்க்கை
இந்த புரிதல் எல்லா தம்பதிகளிடமும் இருக்குமா என்று கேட்டால் அதற்கு கேள்விக்குறி தான்..
இன்றைய தம்பதிகளிடம் ஈகோ மட்டும் தான் அதிகமாக காணப்படுகிறது…
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான் அந்த சண்டைக்குப் பிறகு சமாதானம் ஆக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது ..
கணவன் வந்து முதலில் பேசட்டும் என்றும் மனைவி நினைக்கிறாள் ..
மனைவி வந்து முதலில் பேசட்டும் என்று கணவன் நினைக்கிறான்.
இந்த மாதிரி ஈகோவுடன் இருந்தால்
அந்த தம்பதிகள் எப்படி சந்தோஷமாக வாழ்வார்கள்..
யாரோ ஒருவர் விட்டுக் கொடுத்துப் போனால் குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்..
இதனால்தான் தாம்பத்திய உறவும் பாதிக்கப்படுகிறது..
தாம்பத்திய உறவு பாதிக்கும் சமயத்தில் தான் பல தவறான உறவுகளில் ஈடுபட தோன்றுகிறது..
இந்த தவறான எண்ணங்கள் வருவதற்கு யார் காரணம்
சரியான புரிதல் இல்லாத காரணத்தால்…
நீங்கள் ஈகோவுடன் இருந்தால் நீங்கள் வளர்க்கும் குழந்தையும் அதற்கு திருமணமான பிறகு அந்த ஈகோவை கையில் எடுக்கும்…
அதற்கு காரணம் யார் என்றால்
தாய் தகப்பன் தான்…. உங்களைப் பார்த்தால் அந்த குழந்தையும் கற்றுக் கொள்கிறது.