Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

இந்தியாவில் முதல் முறையாக வணிக வளாகத்துக்குள் மெட்ரோ பாதை – சென்னை பெருமை பெறும் புதிய திட்டம்

படம்:ஊடகம்

சென்னை 11 ஜூன் : இந்தியாவின் மெட்ரோ போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக, வணிக வளாகத்துக்குள் சென்று வெளியேறும் வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடி திட்டம் சென்னை நகரத்தின் திருமங்கலம் பகுதியில் நடைமுறைக்கு வருகிறது.

திருமங்கலம் மெட்ரோ நிலையத்திற்காக 9 மாடிகளைக் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் 4வது மாடியில் மெட்ரோ நிலையம் அமைக்கப்பட, 5 மற்றும் 6வது மாடிகளில் ரயில் பாதைகள் உருவாக்கப்படும். இது சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் விரிந்து இருக்கும்.

இத்திட்டம், ஜூன் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், மெட்ரோ சேவையின் பாவனை அதிகரிக்கும் நோக்கத்திலும்தான் இந்த புதிய கட்டட வடிவமைப்பு செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் நகரப்பொதுமக்கள் வாழ்வை மேம்படுத்தும் வகையில், இதுபோன்ற புதுமையான திட்டங்கள் நாடு முழுவதும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ஸ்ரீதரன்

Scroll to Top