Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

தனியார் மருத்துவச் சேவையின் செலவு பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஒத்துழைப்பு குழு

Picture: JPM

கோலாலம்பூர், 17 ஜூன்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தனியார் மருத்துவச் சேவைகள் மக்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்க, புதிய அமைச்சுத் தோழமை குழுவை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த குழுவில் மலேசிய நிதி அமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து பணியாற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“தனியார் மருத்துவம் தற்போது பலருக்கும் நுகர முடியாத அளவிற்கு செலவு ஆகிவிட்டது. இது வெறும் பொருளாதார பிரச்சினை அல்ல, ஒரு தேசிய நலன் சார்ந்த சிக்கலாக உள்ளது,” என அன்னோார் கூறினார்.

இன்று நடைபெற்ற Sasana Symposium 2025-இல் உரையாற்றிய அவர், புதிய குழு வெறும் சிறு மாற்றங்களை அல்லாது, தனியார் சுகாதாரத்தை நியாயமான விலை, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவர் அணுகக்கூடியதாக மாற்றும் பணியில் ஈடுபடும் எனக் கூறினார்.

மருத்துவக் காப்பீட்டில் அடிப்படைத் திட்டங்களை கொண்டு வருவது, தெளிவான கட்டண அமைப்புகள், மற்றும் வலுவான டிஜிட்டல் சுகாதார முறைகள் எனும் முக்கியமான மாற்றங்களை இந்த குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேபோல், இம்மாதிரிப் புதிய மாற்றங்களை விரைவில் செயல்படுத்த தாங்கள் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாகவும், நாளை (ஜூன் 18) நடக்கவுள்ள அமைச்சுகள் மற்றும் மத்திய வங்கியின் சந்திப்பில் கூடுதல் விவாதம் நடைபெறும் எனவும் அன்னோார் உறுதி செய்துள்ளார்.

-யாழினி வீரா

Scroll to Top