Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

SPM தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1.5 லட்சம் பேர் அரசு உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு – மேல்முறையீட்டுக்கும் திகதி அறிவிப்பு

படம்:ஊடகம்

புத்ராஜெயா, ஜூன் 17: 2023ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களில் 150,557 பேர், மலேசிய அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

UPUOnline இணையவழி விண்ணப்பத்தின் மூலம் மொத்தம் 223,624 பேர் கல்வி பயில தங்கள் விருப்பங்களை சமர்ப்பித்த நிலையில், அதில் 67.33% பேர் மட்டும் இடம் பெற முடிந்தது.

அரசாங்க பொதுப் பல்கலைக்கழகங்களில் 86,589 மாணவர்கள், பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 42,058 மாணவர்கள், சமூகக் கல்லூரிகளில் 20,427 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். MARA நிறுவனங்களின் கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் 1,483 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இடமில்லாமல் தவறவிடப்பட்ட மாணவர்களுக்கு அரசு மேல்முறையீட்டு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஜூன் 17 முதல் ஜூன் 25 வரை 10 நாட்களுக்குள், UPUOnline தளத்தில் தங்களது மேல்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அரசாங்கம் இதன் மூலம் கல்வி சமத்துவத்தையும், மாணவர்கள் திறமைக்கு ஏற்ப கல்வி வாய்ப்புகளை வழங்குவதையும் உறுதி செய்ய முயற்சி எடுத்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் வெற்றி பெறும் வகையில், இந்த வாய்ப்புகளை பெற்றவர்கள் முழு மனதோடு பயன்பெற வேண்டும் எனவும், இடம் பெறாதவர்கள் விலகி நிற்காமல் மேல்முறையீட்டில் பங்கேற்க வேண்டும் என கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

-ஸ்ரீதரன்

Scroll to Top