Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் – ‘Trump’ மலேசியா மற்றும் ‘Anwar’ பாராட்டினார்

Picture : Awani

கோலாலம்பூரில் நடைபெற்ற “அமைதி ஒப்பந்தம்” (Perjanjian Damai KL) பற்றிய உலக மாநாட்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் ‘Donald Trump’ மலேசியாவையும் பிரதமர் ‘Datuk Seri Anwar Ibrahim-மையும்’ பெரிதும் பாராட்டினார். ஆசிய பசிபிக் பொருளாதார மாநாடு (APEC) மேடையில் பேசிய அவர், “மலேசியா அமைதி, ஒற்றுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த முன்மாதிரி” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், அன்வார் தலைமையில் மலேசியா சமூக நீதிக்கும், சர்வதேச ஒத்துழைப்புக்கும் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் கூறினார். குறிப்பாக, “அமைதி ஒப்பந்தம்” மூலம் பல நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு அதிகரித்திருப்பது உலக அமைதிக்கான முக்கிய முன்னேற்றமாக அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டு, மலேசியாவின் மடானி கொள்கையின் கீழ் நடைபெறும் அமைதி முயற்சிகளைப் பாராட்டினர். மலேசியா உலக அரங்கில் அமைதி, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.

பிரதமர் அன்வார் தனது உரையில், “மலேசியா எப்போதும் நீதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தும்” என தெரிவித்தார். இந்த மாநாடு, உலக நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையையும் நட்பையும் வலுப்படுத்தும் புதிய தளமாக அமைந்தது.

Scroll to Top